BREAKING NEWS

ஈரான் போர்: பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ட்ரம்ப்

PR
priya priya punidha in Latest Updates
Report
ஈரான் போர்: பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ட்ரம்ப்

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காணப்படுவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேற்று (24) செய்தியாளர்களிடம் பேசிய அவர், போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரானுக்கு முக்கிய சலுகை வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், 15 அம்சங்களைக் கொண்ட தீர்வுத் திட்டம் ஒன்றையும் அமெரிக்கா ஈரானுக்கு அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான பகைமையை முடிவுக்குக் கொண்டு வர, ஈரானில் உள்ள முக்கிய நபர்களுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், எனினும் ஈரான் தரப்பு, எவ்வித கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கவில்லை என்று கூறி வருகிறது