மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில் அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.
அரசாங்கத்தை கடந்து பொறுப்புள்ள ஊடகங்கள் என்ற வகையில் அங்குள்ளவர்களின் நிலைகளை தாயகத்திற்கு கொண்டு செல்வது எமது பொறுப்பாகும்.
இதன்படி டுபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவருடன் எமது செய்திப் பிரிவு தொடர்பு கொள்ள முடிந்தது.
இதன்போது, நாம் தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் வினவியிருந்தோம்.
தற்போது பதற்றமான சூழலே நிலவவுவதாக அவர் கூறினார்.
மேலும் அந்நாட்டு அரசாங்கம் மக்கள் தொடர்பில் அக்கறையுடன் செயற்படுவதாகவும் உடனுக்குடனான அறிவுறுத்தல்களை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் தேவையற்ற வெளிப்பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைத்தது.
மத்திய கிழக்கில் உள்ள எம்மவர்களின் உண்மை நிலையை கண்டறிய நாம் தொடர்ந்தும் செயற்பட தயாராகவுள்ளோம்.