BREAKING NEWS

கல்வி அமைச்சின் ‘1966’ அழைப்பு மையத்திற்கு மன்னார் உத்தியோகத்தர் தெரிவு!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
கல்வி அமைச்சின் ‘1966’ அழைப்பு மையத்திற்கு மன்னார் உத்தியோகத்தர் தெரிவு!

கல்வி அமைச்சின் திறன்கள் அபிவிருத்திப் பிரிவினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘1966’ துரித அழைப்பு மையத்தின் (Call Center) தமிழ் மொழி மூலமான வளவாளர்களில் ஒருவராக, மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகத் திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் G. A. D. றெஜினோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கல்வி அமைச்சினால் அண்மையில் நடாத்தப்பட்ட அகில இலங்கை ரீதியிலான நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில், நாடு முழுவதிலுமிருந்து தமிழ் மொழிப் பிரிவிற்காகத் தெரிவு செய்யப்பட்ட நான்கு பிரதான வளவாளர்களில் ஒருவராக றெஜினோல்ட் இடம்பிடித்துள்ளார் .

இதற்கான பணி நியமனத்தைப் பெற்றுக்கொண்ட றெஜினோல்ட் , கடந்த ஏப்ரல் 06 ஆம் திகதி அன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

‘1966’ துரித அழைப்பு மையமானது மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல், தொழில்சார் ஆலோசனைகள் மற்றும் கல்வி அமைச்சு தொடர்பான உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காகச் செயற்படுகிறது. இத்திட்டத்தில் றெஜினோல்டின் பங்களிப்பானது, தமிழ் பேசும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தனது சேவைகளைத் தங்குதடையின்றி வழங்கப் பெரும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.