BREAKING NEWS

“நிலக்கரி நட்டத்தை மக்கள் தலையில் சுமத்த முடியாது!”

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
“நிலக்கரி நட்டத்தை மக்கள் தலையில் சுமத்த முடியாது!”

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரம் குறைந்ததால் ஏற்பட்ட மேலதிக நட்டங்களை, இனிவரும் மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது மக்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது என இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தீர்மானித்துள்ளது.

நிலக்கரி தரக்குறைவு அல்லது கொள்வனவு குளறுபடிகளால் ஏற்படும் மேலதிக செலவுகளை மின் நுகர்வோர் மீது சுமத்த ஆணைக்குழு ஏகமனதாக மறுப்புத் தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தி, கடத்துகை மற்றும் விநியோகத்திற்காகச் செலவிடப்படும் உண்மையான மற்றும் நியாயமான செலவுகள் மட்டுமே கட்டணத் திருத்தத்தின் போது கவனத்தில் கொள்ளப்படும்.

கடந்த முறையும் இவ்வாறான முறையற்ற செலவுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஆணைக்குழு, எதிர்காலத்திலும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க தீர்மானித்துள்ளது.

மின்சார சபையின் நிர்வாகத் தவறுகளுக்காகப் பொதுமக்கள் தண்டிக்கப்படக்கூடாது என்பதில் ஆணைக்குழு இம்முறை மிகத் தெளிவாக உள்ளது.