BREAKING NEWS

மத்திய கிழக்கு பதற்றம்: சவூதியில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள முக்கிய பாதுகாப்பு எச்சரிக்கை!

DH
dhusanthi dhusi in உலகம்
Report
மத்திய கிழக்கு பதற்றம்: சவூதியில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள முக்கிய பாதுகாப்பு எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு, சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கை குடிமக்களுக்கு ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் அவசர பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டு தூதரகம் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பரவும் சரிபார்க்கப்படாத வதந்திகளை நம்ப வேண்டாம். சவூதி அரேபிய அதிகாரிகளின் அறிவிப்புகள் மற்றும் இலங்கை தூதரகத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பின்பற்றவும்.

உங்கள் பயண ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டைகள் எப்போதும் செல்லுபடியாகவும், உங்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையிலும் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

தூதரகத்தின் இணையதளம், முகப்புத்தகம் (Facebook), இன்ஸ்டாகிராம், X மற்றும் அதிகாரப்பூர்வ WhatsApp சமூகக் குழு ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்து புதிய அப்டேட்களைப் பெறவும்.

ஏதேனும் அவசர காலங்களில் அல்லது உதவி தேவைப்படின், பின்வரும் எண்களை 24/7 தொடர்பு கொள்ளலாம்:

அவசர தொடர்பு எண்கள்: +966 54 947 7567 / +966 56 982 2700

WhatsApp / IMO (செய்திகள் மட்டும்): +966 56 975 3380

மின்னஞ்சல்: slemb.riyadh@mfa.gov.lk

சவூதி அரேபியாவில் உள்ள அனைத்து இலங்கையர்களும் தூதரகத்தின் இந்த அறிவுறுத்தல்களைக் கவனத்தில் கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.