BREAKING NEWS

“FBI பணிப்பாளர் காஷ் படேலுக்கு வலைவீச்சு!”

DH
dhusanthi dhusi in உலகம்
Report
“FBI பணிப்பாளர் காஷ் படேலுக்கு வலைவீச்சு!”

அமெரிக்காவின் முதன்மைப் புலனாய்வு அமைப்பான FBI-இன் பணிப்பாளர் காஷ் படேலின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கை ஊடுருவி, அதிலிருந்த முக்கியத் தரவுகளைத் திருடியுள்ளதாக ஈரான் நாட்டுடன் தொடர்புடைய ஹெக்கர்கள் குழு உரிமை கோரியுள்ளது.

‘ஹண்டாலா ஹெக் குழு’ (Handala Hack Team) என்ற பெயரிலான இந்த ஹேக்கர் குழு, தமது இணையத்தளத்தில் காஷ் படேலின் புகைப்படங்கள், சுயவிபரக் குறிப்பு மற்றும் சில மின்னஞ்சல் மாதிரிகளை வெளியிட்டு இந்த ஊடுருவலை உறுதிப்படுத்தியுள்ளது

வெளியிடப்பட்ட தரவுகளில் 2010 முதல் 2019 வரையிலான காலப்பகுதிக்குரிய தனிப்பட்ட மற்றும் உத்தியோகபூர்வத் தொடர்பாடல்கள் உள்ளடங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.

படேலின் மின்னஞ்சல்கள் ஊடுருவப்பட்டமையை அமெரிக்க நீதித் திணைக்கள அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இது அமெரிக்காவின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரியின் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

அமெரிக்காவின் மிக உயரிய பாதுகாப்பு அதிகாரியின் மின்னஞ்சல் கணக்கே ஊடுருவப்பட்டமை சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.