இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில், 2026 பெப்ரவரி மாதத்திற்கான பணவீக்க விகிதம் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரம் திணைக்களத்தின் தகவலின்படி, 2026 ஜனவரியில் 2.4% ஆக இருந்த பணவீக்கம், பெப்ரவரியில் 1.6% ஆகக் குறைந்துள்ளது.
மேலும், உணவுப் பொருட்களின் முதன்மைப் பணவீக்கம் ஜனவரியில் 3.4% ஆக இருந்த நிலையில், பெப்ரவரியில் 1.1% ஆகக் குறைந்துள்ளது.
இதேவேளை, உணவு அல்லாத பொருட்களின் வருடாந்திர பணவீக்கம் ஜனவரியில் 1.6% ஆக இருந்த நிலையில், பெப்ரவரியில் 1.9% ஆக அதிகரித்துள்ளது.