ஓட்டுநர் உரிமங்களுக்கு அபராதப் புள்ளி முறை அறிமுகம் – முக்கிய காரணங்கள் வெளியீடு

ஒழுக்கமாகவும் பாதுகாப்பாகவும் வாகனம் ஓட்டுவதைக் கட்டியெழுப்பும் நோக்கில், ஓட்டுநர் உரிமங்களுக்கு அபராதப் புள்ளி முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

அடுத்த ஆண்டு முதல் இந்த குறைபாடு புள்ளி முறை அமலுக்கு வரும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறை, வீதிகளில் மீண்டும் மீண்டும் போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநர்களை எளிதில் அடையாளம் காண உதவும் எனவும் அவர் கூறினார்.

மேலும், நாட்டில் பாதுகாப்பான ஓட்டுநர் பண்பை உருவாக்குவது மற்றும் விபத்துகளை குறைப்பது தான் இந்த விதிமுறையின் பிரதான நோக்கம் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை சினிமா