BREAKING NEWS

மீனவர்களுக்கு எரிபொருள் மானியம்!

DH
dhusanthi dhusi in அரசியல்
Report
மீனவர்களுக்கு எரிபொருள் மானியம்!

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் விநியோகத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள மீன்பிடித் துறையினருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், புதிய எரிபொருள் மானியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த மானியத் திட்டம் ஏப்ரல் 20, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

சிறிய ரக மீன்பிடி படகுகள்: ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 50 ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

நெடுநாள் மீன்பிடி படகுகள் (Multi-day boats): ஒரு பயணத்திற்கு (per voyage) 150,000 ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

மீன்பிடித் தொழிலை விரைவாக இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதும், எரிபொருள் விலை உயர்வால் மீனவ சமூகம் எதிர்நோக்கும் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதுமே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.