BREAKING NEWS

மார்ச் முதல் 18 நாட்களில் இலங்கைக்கு 1 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை

PR
priya priya punidha in Latest Updates
Report
மார்ச் முதல் 18 நாட்களில் இலங்கைக்கு 1 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை

மார்ச் மாதத்தின் முதல் 18 நாட்களில் இலங்கைக்கு 109,410 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


வெளியிடப்பட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்தக் காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 27,613 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது மொத்த வருகையில் 25% ஆகும்.


அத்துடன், ரஷ்யாவிலிருந்து 9,562 பேரும், ஜெர்மனியிலிருந்து 8,258 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 10,111 பேரும், சீனாவிலிருந்து 9,100 பேரும் மற்றும் அவு’ஸ்திரேலியாவிலிருந்து 6,114 பேரும் இந்தக் காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.


மேலும், 2026 ஜனவரி 01 முதல் மார்ச் 18 வரையிலான காலப்பகுதியில் மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 666,065 ஆகப் பதிவாகியுள்ளது.


அவர்களுள் இந்தியாவிலிருந்து 127,353 பேரும், ரஷ்யாவிலிருந்து 59,795 பேரும் மற்றும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 70,439 பேரும் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.