BREAKING NEWS

முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டு பயணங்களின் போது பணத்தை வீண்விரயமாக்கியதாக குற்றச்சாட்டு

PR
priya priya punidha in Latest Updates
Report
முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டு பயணங்களின் போது பணத்தை வீண்விரயமாக்கியதாக குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டுப் பயணங்களுக்குச் செலவழித்த பணத்தின் பட்டியலை இன்று (03) நாடாளுமன்றத்தில் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க சமர்ப்பித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகள் அந்நியச் செலாவணியை வீணடித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அந்நியச் செலாவணிச் சட்ட மூலம் மீதான விவாதத்தின் போது ஜயசிங்க இவ்வாறு கூறினார்.

2010-2015 ஆம் ஆண்டுகளில் மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரூ. 357 மில்லியன் செலவிட்டார். 2015-2019 ஆம் ஆண்டுகளில் மைத்திரிபால சிறிசேன ரூ. 380 மில்லியன் செலவிட்டார். 2020-2022 ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்ஷ ரூ. 126 மில்லியன் செலவிட்டார். அனுரகுமார திசாநாயக்க ஏழு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டார். செலவழித்த தொகை ரூ. 149 மில்லியன். ரணில் விக்ரமசிங்க 16 பயணங்களை மேற்கொண்டார். ரூ. 530 மில்லியன். இப்படித்தான் அவர் அந்நியச் செலாவணியை வீணடித்தார். நாம் கொண்டு வரும் அந்நியச் செலாவணியை இப்போது வெற்றிகரமாக முதலீடு செய்கிறோம்.