பேருந்து கட்டணத் திருத்தத்தைக் கோரி நாட்டின் பல பகுதிகளில் தனியார் பேருந்து சங்கங்கள் இன்று (23) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், நுவரெலியாவில் மாத்திரம் பேருந்து சேவைகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.
பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் வரை சேவையிலிருந்து விலகிக் கொள்ளச் சில சங்கங்கள் எடுத்துள்ள முடிவால், நாட்டின் பிரதான பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் போக்குவரத்து முடங்கியுள்ள போதிலும், நுவரெலியா மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் எவ்வித தடையுமின்றி வழக்கம் போல் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் மலையகப் பயணிகள் பெரும் சிரமமின்றித் தமது பயணங்களைத் தொடர்கின்றனர்.
கட்டணத் திருத்தம் தொடர்பாக இன்று மாலை அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்படவுள்ள நிலையில், அதுவரை இந்தப் போக்குவரத்து இழுபறி தொடரும் என அஞ்சப்படுகிறது.