உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்து வரும் நிலையில், இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் (CPC) அதிரடி அவசரகாலத் திட்டமொன்றை வகுத்துள்ளது.
தற்போதைய கையிருப்பு நிலவரப்படி, வரும் ஓகஸ்ட் மாதம் வரை இலங்கையில் தடையின்றி எரிபொருளை விநியோகிக்க முடியும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் உறுதியளித்துள்ளார். இருப்பினும், ஓகஸ்ட்டுக்குப் பின்னரான நெருக்கடியைத் தவிர்க்க, இந்தியாவிலிருந்து பெருமளவு எரிபொருளைக் கொள்வனவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இந்திய நிறுவனங்களுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரை விட இந்தியாவிலிருந்து எரிபொருளைக் கொண்டுவருவதற்கு போக்குவரத்துச் செலவு குறைவு என்பதால், இந்தியாவிற்கே முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
அதேவேளை, வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் நீண்டகாலம் தொடருமானால், அதன் தாக்கத்தால் இலங்கையில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.