BREAKING NEWS

கம்மன்பில தாக்கல் செய்த மனு 24 ஆம் திகதி பரிசீலனைக்கு

AD
admin in அரசியல்
Report
கம்மன்பில தாக்கல் செய்த மனு 24 ஆம் திகதி பரிசீலனைக்கு

ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தாக்கல் செய்த மனுவை பரிசீலனைக்காக 24 ஆம் திகதி அழைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வாவின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இருப்பினும், தற்போது உதய கம்மன்பிலவை கைதுசெய்வதற்கு எந்த முடிவையும் எடுக்கவில்லை என, ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறியப்படுத்தியிருந்தது.