BREAKING NEWS

தோல்வியே அறியாத நாயகன்! கிரிக்கெட் வரலாற்றில் கௌதம் கம்பீர் அரிய சாதனை.

DH
dhusanthi dhusi in உலகம்
Report
தோல்வியே அறியாத நாயகன்! கிரிக்கெட் வரலாற்றில் கௌதம் கம்பீர் அரிய சாதனை.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கிரிக்கெட் உலகில் ஒரு அபூர்வமான சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார். ஒரு வீரராக, அணி தலைவராக மற்றும் பயிற்சியாளராக அவர் பங்கேற்ற எந்தவொரு முக்கிய இறுதிப்போட்டியிலும் இதுவரை தோல்வியைத் தழுவியதே இல்லை என்ற மகுடத்தை அவர் சூடியுள்ளார்.

ஐசிசி மற்றும் ஆசியக் கிண்ண தொடர்களில் பயிற்சியாளராக அவரது புள்ளிவிபரங்கள் பிரமிக்க வைக்கின்றன:

பங்கேற்ற போட்டிகள்: 21.

வெற்றிகள்: 20.

வெற்றி சதவீதம்: 95%.

வென்ற சம்பியன்ஷிப் பட்டங்கள்: 3.

கம்பீர் பிரதிநிதித்துவப்படுத்திய அணிகள் வெற்றி வாகை சூடிய முக்கிய இறுதிப்போட்டிகளின் பட்டியல்:

2007: டி20 உலகக் கிண்ணம்.

2011: ஒருநாள் உலகக் கிண்ணம்.

2012, 2014 & 2024: ஐபிஎல் சம்பியன்ஷிப்.

2025: சம்பியன்ஸ் கிண்ணம் (CT) மற்றும் ஆசியக் கிண்ணம்.

2026: டி20 உலகக் கிண்ணம் .

இந்த வெற்றியின் மூலம், இந்திய அணியை இரண்டு ஐசிசி தொடர்களின் இறுதிப்போட்டிக்கு வெற்றிகரமாக வழிநடத்திய பயிற்சியாளர்களின் பட்டியலில் ராகுல் டிராவிட்டிற்குப் பிறகு கம்பீர் இணைந்துள்ளார்.