மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக, உலகளாவிய உணவுப் பொருட்களின் விலை மார்ச் மாதத்தில் 2.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) தெரிவித்துள்ளது.
சீனி விலை 7.2 சதவீதமும், சமையல் எண்ணெய் விலை 5.1 சதவீதமும் அதிரடியாக உயர்ந்துள்ளன.
அமெரிக்காவில் நிலவும் வறட்சி மற்றும் உரங்களின் விலை உயர்வால் கோதுமை விலை 4.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வால், பிரேசில் போன்ற நாடுகள் கரும்பை எத்தனால் தயாரிக்க பயன்படுத்துவது சீனி விலை உயரக் காரணமாகியுள்ளது.
இறைச்சி விலை 1.0 சதவீதமும், பால் பொருட்கள் விலை 1.2 சதவீதமும் அதிகரித்துள்ளன.
இந்தப் போர்ச் சூழல் 40 நாட்களைத் தாண்டினால், விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டு இந்த ஆண்டு முழுவதும் உணவு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.