BREAKING NEWS

அரசாங்கம் உடனடியாகத் தீர்வுகளை வழங்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பட்டது 

PR
priya priya punidha in Latest Updates
Report
அரசாங்கம் உடனடியாகத் தீர்வுகளை வழங்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பட்டது 

தமது பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வுகளை வழங்கத் தவறினால், தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்த தீர்மானத்தை இன்று (28) அறிவிக்கப் போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இன்று நடைபெறவுள்ள சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு, முன்னெடுக்கப்படவுள்ள மேலதிக தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் மருத்துவர் பிரபாத் சுகததாச தெரிவித்தார். 

கடந்த திங்கட்கிழமை காலை முதல் 5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. 

வெளிநோயாளி பிரிவுகளில் தட்டுப்பாடாக உள்ள மருந்துகளை வெளி மருந்தகங்களில் கொள்வனவு செய்வதற்கான மருந்துச் சீட்டுகளை வழங்க மறுப்பது உள்ளிட்ட போராட்டங்களை மருத்துவர்கள் தற்போது முன்னெடுத்து வருகின்றனர். 

அரசாங்கத்தின் பதிலைப் பொறுத்தே அடுத்தகட்டப் போராட்டங்களின் வீரியம் அமையும் என சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.