BREAKING NEWS

நிறைவுக்கு வந்தது மருத்துவர்களின் போராட்டம்!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
நிறைவுக்கு வந்தது மருத்துவர்களின் போராட்டம்!

பணி நியமன முறைகேடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்திருந்த 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (ஏப்ரல் 11) காலை உத்தியோகபூர்வமாக நிறைவுக்கு வந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளின் சேவைகளை முடக்கியிருந்த இந்த அடையாள வேலைநிறுத்தம், இன்று காலை 8.00 மணியுடன் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் மீண்டும் கடமைகளுக்குத் திரும்பியுள்ளதால், வைத்தியசாலை சேவைகள் வழமைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளன.

இது குறித்து கருத்துத் தெரிவித்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, “அடையாள வேலைநிறுத்தம் நிறைவடைந்திருந்தாலும், எமது போராட்ட வீரியம் குறையவில்லை. அடுத்தகட்டமாக எடுக்கப்பட வேண்டிய தீர்க்கமான நடவடிக்கைகள் குறித்து சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் விரிவாக ஆராய்ந்து விரைவில் அறிவிப்போம்,” எனத் தெரிவித்தார்.

அமைச்சரின் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டம், சுகாதாரத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.