சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,900 டொலரைக் கடந்துள்ளது. 

உலகளாவிய அரசியல் பதற்றங்கள், அமெரிக்க டொலரின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவையே இந்த உயர்வுக்கு முக்கிய காரணங்களாகும். 

அதேபோல், வெள்ளி மற்றும் பிளட்டினம் விலைகளும் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. 

மேலும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை விரைவில் 5,000 டொலர் நிலையை எட்டும், அதைத் தொடர்ந்து 5,187.79 டொலர் வரை உயர வாய்ப்புள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அந்தவகையில் அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, இன்று (23) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. 

இன்று காலை நிலவரப்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.390,000 விற்பனை செய்யப்படுகிறது. 

22 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.360,700 விற்பனை செய்யப்படுகிறது. 

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,088 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கை சினிமா