BREAKING NEWS

தங்க விலை சரிவு: மூன்று நாளில் 29,000 ரூபாய் வீழ்ச்சி

PR
priya priya punidha in Latest Updates
Report
தங்க விலை சரிவு: மூன்று நாளில் 29,000 ரூபாய் வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக, உள்நாட்டு தங்கச் சந்தையிலும் கடந்த மூன்று நாட்களில் குறிப்பிடத்தக்க விலை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

இதன்படி, கடந்த வியாழன், வெள்ளி மற்றும் இன்று (21) ஆகிய மூன்று தினங்களில் மொத்தமாக தங்கத்தின் விலை சுமார் 29,000 ரூபாயால் குறைந்துள்ளது. 

கடந்த 19ஆம் திகதி 13,000 ரூபாயாலும், நேற்று (20) 6,000 ரூபாயாலும் விலை வீழ்ச்சியடைந்திருந்ததுடன், இன்றைய தினம் மேலும் 10,000 ரூபாயால் விலை குறைவடைந்துள்ளது. 

உலக சந்தையில் தங்கத்தின் விலை 5,000 டொலர் எல்லைக்குக் கீழ் வீழ்ச்சியடைந்தமையே இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

மத்திய கிழக்கு போர் சூழலால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், முதலீட்டு நடவடிக்கைகள் மந்தகதியில் உள்ளமை மற்றும் எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக அமெரிக்க டொலர் வலுவடைந்துள்ளமை போன்ற காரணிகள் தங்க விலை வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

எவ்வாறாயினும், இந்த நிலைமை தற்காலிகமானது எனவும், எண்ணெய் விலை ஸ்திரமடைந்த பின்னர் தங்கத்தின் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.