BREAKING NEWS

“சர்வதேச சந்தை மாற்றங்களால் உள்நாட்டு தங்க விலையில் கடும் தளம்பல்: பவுண் விலை மீண்டும் உயரும் என கணிப்பு!”

PR
priya priya punidha in உலகம்
Report
“சர்வதேச சந்தை மாற்றங்களால் உள்நாட்டு தங்க விலையில் கடும் தளம்பல்: பவுண் விலை மீண்டும் உயரும் என கணிப்பு!”

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் காரணமாக, இலங்கையின் தங்கச் சந்தையும் கடும் ஸ்திரமின்மைக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக உள்நாட்டில் தங்கத்தின் விலை குறைவடைந்து செல்லும் போக்கைக் காட்டினாலும், அது ஒரு நிலையான மட்டத்தைப் பேணவில்லை என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வியாழக்கிழமை (15) நிலவரப்படி, இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ. 365,000 ஆகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ. 334,000 ஆகவும் பதிவாகியிருந்தது.

எவ்வாறாயினும், 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்து, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,000 டொலர்களைத் தாண்டும் என சர்வதேச நிதி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த 2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை சுமார் 55% ஆல் அதிகரித்திருந்ததுடன், இது வரலாற்றில் தங்கத்தின் விலை அதிகரித்த சாதனை ஆண்டாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.