BREAKING NEWS

தெஹிவளை, வைத்திய வீதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மீட்பு

PR
priya priya punidha in Latest Updates
Report
தெஹிவளை, வைத்திய வீதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மீட்பு

தெஹிவளை, வைத்திய வீதி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. 

கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலொன்றின் அடிப்படையில், நேற்று (04) பிற்பகல் தெஹிவளை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவொன்று முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தக் கைத்துப்பாக்கி மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த கைத்துப்பாக்கியுடன் மூன்று தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. 

சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.