BREAKING NEWS

க.பொ.த சாதாரண தர பெறுபேறு தேவையில்லை: 12ஆம் தர தொழிற்கல்விக்கு விண்ணப்பங்கள் கோரல்!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
க.பொ.த சாதாரண தர பெறுபேறு தேவையில்லை: 12ஆம் தர தொழிற்கல்விக்கு விண்ணப்பங்கள் கோரல்!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, 2026/2027 கல்வியாண்டுக்கான 12-ஆம் தர தொழிற்கல்விப் பாடநெறிகளுக்கு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் 13 ஆண்டுகள் கல்வியை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் கருத்திற்கொள்ளப்படமாட்டாது. கடந்த மூன்று ஆண்டுகளில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

12-ஆம் தரம்: மென் திறன்கள் (Soft Skills) மற்றும் அடிப்படைப் பயிற்சிகள்.

13-ஆம் தரம்: அரசாங்க நிறுவனங்கள் மற்றும் வேலைத்தளங்களில் நேரடித் தொழிற்பயிற்சி.

படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் செல்லுபடியாகும் NVQ Level 4 தகைமை வழங்கப்படும்.

சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், வாகனத் தொழில்நுட்பம், விவசாயம், அழகுக்கலை, கட்டுமானம் உட்படப் பல தொழிற்றுறைகள் உள்ளடங்கியுள்ளன.

மேலதிக விபரங்கள், விண்ணப்பப் படிவம் மற்றும் பாடசாலைகளின் பட்டியல் ஆகியவற்றை அமைச்சின் இணையத்தளமான www.moe.gov.lk என்ற முகவரியில் பார்வையிடலாம்.