ஹொரணை – இரத்தினபுரி பிரதான வீதியில் நிகழ்ந்த விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்தார்.
முச்சக்கரவண்டி ஒன்றும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த விபத்தின் காரணமாக பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.