BREAKING NEWS

வெயிலில் விளையாடும் சிறுவர்களுக்கு – வைத்தியர் சன்ன டி சில்வா அறிவுறுத்தல்!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
வெயிலில் விளையாடும் சிறுவர்களுக்கு – வைத்தியர் சன்ன டி சில்வா அறிவுறுத்தல்!

தற்போது நிலவும் கடுமையான வெப்பமான காலநிலைக்கு மத்தியில், பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடும்போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய் நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெப்பம் மிகத் தீவிரமாக இருக்கும் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாணவர்களை வெயிலில் விளையாட அனுமதிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சிறுவர்கள் தொடர்ந்து விளையாட விரும்புவார்கள், ஆனால் ஆசிரியர்கள் அவர்களைச் சீரான இடைவெளியில் நிழலான இடங்களில் ஓய்வெடுக்கச் செய்ய வேண்டும்.

அடிக்கடி தண்ணீர் அல்லது உப்புச் சத்துள்ள பானங்களை அருந்த அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

ஆபத்தான அறிகுறிகள்:விளையாடும்போது ஒரு குழந்தைக்கு அதீத சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு அல்லது குழப்பமான நிலை ஏற்பட்டால், உடனடியாக அவர்களைக் குளிர்ந்த இடத்திற்கு மாற்றி முதலுதவி அளிக்க வேண்டும். நிலைமை சீராகாவிட்டால் தாமதிக்காமல் அரசாங்க வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சரியான முன்னெச்சரிக்கை இல்லையெனில், இந்த வெப்பம் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.