மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹால்பிட்டிய பகுதியில் இரகசியமாக இயங்கி வந்த பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, ஹால்பிட்டிய பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையின் போதே இந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முற்றுகையின் போது, மதுபானம் தயாரிப்பதற்காகப் பெருமளவிலான பீப்பாய்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ‘கோடா’ (Godha) மற்றும் வடி சாராயம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் அந்த இடத்திலிருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.