மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் பணவீக்கம் (Inflation) அதிரடியாக அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 10% அதிகரித்து, அந்த உயர்வு இந்த ஆண்டின் பெரும்பகுதி வரை நீடித்தால், உலகளாவிய பணவீக்கம் 40 அடிப்படைப் புள்ளிகளால் (40-basis-point) அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜப்பானிய நிதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் உரையாற்றிய அவர், “புதிய மோதல் சூழலால் உலகப் பொருளாதாரத்தின் தாங்குதிறன் மீண்டும் ஒருமுறை கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்தார்.
“சிந்திக்க முடியாதவற்றையும் சிந்தித்து, வரப்போகும் சவால்களுக்குத் தயாராக இருங்கள்” என உலக நாடுகளின் பொருளாதார நிபுணர்களுக்கு அவர் அதிரடி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.