நாட்டில் அதிகரித்து வரும் டிஜிட்டல் அடிமைத்தனத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் சமூக ஊடகங்கள் மற்றும் சூதாட்ட செயலிகளுக்கு வயது வரம்புகளை விதிக்க இந்தியாவின் வருடாந்தப் பொருளாதார ஆய்வு அறிக்கை பரிந்துரை செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமூக ஊடகங்கள் மற்றும் இணையவழி சூதாட்ட செயலிகளைப் பயன்படுத்துவதற்குத் தேசிய அளவில் ஒருங்கிணைந்த வயது வரம்பை நிர்ணயிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடக நிறுவனங்கள் பயனாளிகளின் வயதைச் சரிபார்ப்பதற்கும், சிறுவர்களுக்குப் பொருத்தமான உள்ளடக்கங்களை உறுதிப்படுத்துவதற்கும் சட்டரீதியாகப் பொறுப்பாக்கப்பட வேண்டும்.

குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளின் திரை நேரத்தைக் குறைக்கவும், மின்னணு சாதனங்கள் இல்லாத நேரங்களை உருவாக்கவும், இணையத்திற்கு அப்பாற்பட்ட செயல்களில் ஈடுபடவும் ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

செயலிகளில் உள்ள ஒட்டோ-பிளே (Auto-play) வசதி மற்றும் குறிப்பிட்ட நபர்களை இலக்கு வைக்கும் விளம்பரங்கள் ஆகியவை இளையோர் மத்தியில் அடிமைத்தனத்தைத் தூண்டுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாதீட்டு திட்டத்தைத் தாக்கல் செய்வதற்குச் சில தினங்களுக்கு முன்னதாக இந்தப் பரிந்துரைகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இவ்விடயம் தொடர்பில் மெட்டா, யூடியூப் மற்றும் எக்ஸ் ஆகியவை உடனடியாக பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சினிமா