BREAKING NEWS

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்:அருகிலுள்ள தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

PR
priya priya punidha in Latest Updates
Report
இந்தோனேசியாவில்  நிலநடுக்கம்:அருகிலுள்ள தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

கிழக்கு இந்தோனேசியாவில் உள்ள டெர்னாட் நகரின் கடற்கரைக்கு அப்பால், வடக்கு பகுதி கடலில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அருகிலுள்ள தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தோனேசிய நேரப்படி இன்று காலை 6:48 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தோனேசியாவில் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். கடலில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளில் சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தோனேசியா மட்டுமின்றி பிலிப்பைன்ஸ், மலேசியாவிலும் சுனாமி அலைகள் எழ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் தற்போது வரை கிடைக்கவில்லை.