BREAKING NEWS

“ஈரான்: நாடு முழுவதும் அரசு செயல்பாடுகள் தொடர்கிறது”

PR
priya priya punidha in Latest Updates
Report
“ஈரான்: நாடு முழுவதும் அரசு செயல்பாடுகள் தொடர்கிறது”

தனது நாட்டுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள அரச நிறுவனங்களின் பணிகள் தடையின்றித் தொடர்வதாக அவர் வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

‘X’ சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள ஜனாதிபதி, தற்போதைய சூழ்நிலையில் மத்திய அரசாங்கத்திற்கும் பிராந்தியத் தலைமைத்துவத்திற்கும் இடையில் நெருக்கமான தொடர்பு நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் பின்னணியிலும், நாடு முழுவதும் மக்களின் நாளாந்த வாழ்க்கை தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதை ஜனாதிபதி மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.