ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வளைகுடா நாடுகளை குறிவைத்து ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களுக்குப் பிறகு இன்று அபுதாபியின் சயீத் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த ஒரு “சம்பவத்தில்” ஒருவர் கொல்லப்பட்டதோடு எழுவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“சயீத் சர்வதேச விமான நிலையத்தில் ஒரு ஆசிய நாட்டவர் இறந்ததாகவும் ஏழு பேர் காயமடைந்ததாகவும் அபுதாபி விமான நிலையங்கள் உறுதிப்படுத்தின,” என்று விமான நிலையத்தை நிர்வகிக்கும் அமைப்பு தனது X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.