BREAKING NEWS

இலங்கை கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியக் கப்பல்: பலியான வீரர்களுக்கு ஈரான் கௌரவம்!

DH
dhusanthi dhusi in உலகம்
Report
இலங்கை கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியக் கப்பல்: பலியான வீரர்களுக்கு ஈரான் கௌரவம்!

இலங்கை கடற்பரப்புக்கு அருகில் அமெரிக்கப் படைகளின் தாக்குதலுக்குள்ளாகி மூழ்கடிக்கப்பட்ட ஈரானியக் கடற்படையின் ‘IRIS Dena’ பிரிகேட் ரகப் போர்க்கப்பலில் உயிரிழந்த மாலுமிகளின் உடல்களைத் தாயகம் கொண்டு வருவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச ஊடகமான ‘அல் ஜசீரா’ மற்றும் ஈரானின் ‘ஃபார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனத் தகவல்படி, குறித்த கப்பலில் இருந்த 104 மாலுமிகளில் 84 பேரின் உடல்கள் இதுவரை முழுமையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த உடல்கள் அனைத்தும் மிக விரைவில் ஈரானுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாக ஈரானிய இராணுவத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானிய வெளிவிவகார அமைச்சு எடுத்துள்ள விசேட முயற்சிகள் மற்றும் இலங்கை அரசாங்கம் வழங்கி வரும் முழுமையான ஒத்துழைப்பு ஆகியவற்றின் ஊடாக இந்த உடல்களைத் தாயகம் கொண்டு வரும் (Repatriation) பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எஞ்சிய உடல்களை அடையாளம் காணும் பணிகளும் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் பிராந்திய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்த வீரர்களுக்குத் தேசிய மட்டத்திலான கௌரவத்தை வழங்க ஈரான் தயாராகி வருகின்றது.