BREAKING NEWS

ஈரானிய எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் அதிரடித் தாக்குதல்: 4 சாரதிகள் பலி!

DH
dhusanthi dhusi in உலகம்
Report
ஈரானிய எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் அதிரடித் தாக்குதல்: 4 சாரதிகள் பலி!

ஈரானின் டெஹ்ரான் மற்றும் அல்போர்ஸ் மாகாணங்களில் உள்ள எண்ணெய் சேமிப்பு நிலையங்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், நான்கு எரிபொருள் தாங்கி ஊர்திச் சாரதிகள் உயிரிழந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

டெஹ்ரான் மற்றும் அல்போர்ஸ் பகுதிகளில் உள்ள நான்கு பிரதான எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் மற்றும் ஒரு எண்ணெய் உற்பத்திப் பரிமாற்ற மையம் ஆகியவற்றை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. தாக்குதலைத் தொடர்ந்து குறித்த பகுதிகளில் பாரிய தீ பரவியுள்ள நிலையில், தீயணைப்புப் படையினர் மற்றும் பாதுகாப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதல் காரணமாக எண்ணெய் உட்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் எவ்விதத் தட்டுப்பாடும் ஏற்படவில்லை என ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விநியோகக் கட்டமைப்பு சீராக இருப்பதை உறுதிப்படுத்த அவசரகால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு எண்ணெய் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.