BREAKING NEWS

ஈரான் மக்களுக்கு இஸ்ரேல் இராணுவத்தின் அதிரடி எச்சரிக்கை!

DH
dhusanthi dhusi in உலகம்
Report
ஈரான் மக்களுக்கு இஸ்ரேல் இராணுவத்தின் அதிரடி எச்சரிக்கை!

ஈரானில் உள்ள மக்கள் இன்று இரவு 9:00 மணி வரை புகையிரதங்களை பயன்படுத்துவதையோ அல்லது புகையிரத தண்டவாளங்களுக்கு அருகில் செல்வதையோ முற்றிலுமாகத் தவிர்க்குமாறு இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் தனது பாரசீக மொழி எக்ஸ் (X) கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் பாதுகாப்பைக் கருதி, ஈரான் முழுவதும் புகையிரத பயணங்களைத் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். புகையிரத நிலையங்களுக்கு அருகில் இருப்பது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் ஈரானுடன் போரில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ளதால் ஈரான் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.