BREAKING NEWS

யாழ். பாதுகாப்பு தலைமையகத்தை அகற்றும் எந்த திட்டம் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு

PR
priya priya punidha in Latest Updates
Report
யாழ். பாதுகாப்பு தலைமையகத்தை அகற்றும் எந்த திட்டம் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு

யாழ்ப்பாணத்திலிருந்து பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றும் எந்த திட்டமும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சமூகத்திற்குள் இது போன்ற தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர், ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யாகொந்தா குறிப்பிட்டார்.

இதுபோன்ற புனையப்பட்ட மற்றும் உணர்திறன் மிக்க கூற்றுக்களைப் பரப்பும் நபர்கள் பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை உருவாக்குகிறார்கள் எனவும் இது நாட்டிற்கு ஆரோக்கியமற்ற சூழ்நிலை என்றும் பாதுகாப்புச் செயலாளர் குறிபப்பிட்டுள்ளார்.

அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய பிரச்சாரங்களை வன்மையாகக் கண்டிப்பதாக என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.