BREAKING NEWS

விஜய் இரசிகர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஜெய்.

DH
dhusanthi dhusi in Tamilnadu
Report
விஜய் இரசிகர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஜெய்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியை நேரில் கண்டுகளித்த நடிகர் ஜெய், இரசிகர்களின் எதிர்பாராத கோரிக்கைக்கு விஜய் பாணியில் பதிலளித்தமை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகர் விஜய் அரசியலில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துகள் திரையுலகில் நிலவி வருகின்றன. இந்நிலையில், மைதானத்தில் நடிகர் ஜெய்யைக் கண்ட விஜய் ரசிகர்கள், அவரை நோக்கி உற்சாகமாக “Vote for TVK” (தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களியுங்கள்) என்று முழக்கமிட்டனர்.

இரசிகர்களின் எதிர்பாராத இந்த அரசியல் கோரிக்கையைக் கண்டு சற்றும் தயங்காத நடிகர் ஜெய், விஜய் பாணியிலேயே ரசிகர்களை நோக்கித் தனது ‘பறக்கும் முத்தத்தை’ (Flying Kiss) பறக்கவிட்டார். ஜெய்யின் இந்தச் செயல் மைதானத்தையே உற்சாகத்தில் ஆழ்த்தியது. இது தொடர்பான காணொளிகள் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.

நடிகர் விஜய்க்கான ஆதரவு திரைத்துறையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்குப் பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வரும் சூழலில், இப்போது நடிகர் ஜெய்யும் இரசிகர்களின் அழைப்பை ஏற்று ஆதரவு காட்டியிருப்பது விஜய் இரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.