BREAKING NEWS

தேர்தலுக்குப் பின் பெப்ரவரியில் திரைக்கு வரும் விஜய்யின் ‘ஜனநாயகன்’!

DH
dhusanthi dhusi in சினிமா
Report
தேர்தலுக்குப் பின் பெப்ரவரியில் திரைக்கு வரும் விஜய்யின் ‘ஜனநாயகன்’!

பாக்ஸ் ஆபிஸ் மன்னன் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’, நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைக்கு வரத் தயாராகி வருகிறது.

படத்தின் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்காக மறுஆய்வு குழுவிற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி இறுதிக்குள் தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துவிடும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் (KVN), தமிழகத் தேர்தல் முடிந்த ஒரு வார கால இடைவெளியில், பெப்ரவரி மாதத்திலேயே படத்தை உலகமெங்கும் திரையிடத் திட்டமிட்டுள்ளது.

பொங்கல் வெளியீட்டைத் தவறவிட்டாலும், விஜய்யின் கடைசிப் படத்தை திரையில் காண இரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

தேர்தல் பரபரப்பிற்குப் பிறகு ‘ஜனநாயகன்’ வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.