அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத தடுப்பு அமைப்பின் (NCTC) தலைவர் ஜோ கென்ட், தனது பதவியை அதிரடியாக இராஜினாமா செய்துள்ளார். ஈரான் மீதான போர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனது இராஜினாமா குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள ஜோ கென்ட், “இஸ்ரேலின் அழுத்தங்களுக்குப் பணிந்தே ஈரான் மீது போர் தொடுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு நிலையிலும் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு ஈரான் அச்சுறுத்தலாக இருந்ததில்லை. இந்தப் போர் தொடர்வதில் எனக்கு உடன்பாடு இல்லை; எனது மனசாட்சியும் இதனை ஏற்கவில்லை” என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் போர் நடவடிக்கைகளுக்கு எதிராக, மிக முக்கிய அரச அதிகாரி ஒருவர் இவ்வாறு போர்க்கொடி தூக்கிப் பத விலகியிருப்பது, ட்ரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் அரசியல் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. சர்வதேச அரங்கிலும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.