BREAKING NEWS

கட்டாக்காலியாகத் திரியும் மாடுகள் : உரிமையாளருக்கு தண்டப்பணம்

MI
mithu mithu in உள்ளூர் செய்திகள்
Report
கட்டாக்காலியாகத் திரியும் மாடுகள் : உரிமையாளருக்கு தண்டப்பணம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வீதிகளில் தொடர்ச்சியாகக் கட்டாக்காலி மாடுகளினால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்துகளினால் உயிரிழப்புக்கள் மற்றும் வாகனங்களுக்கு பாரிய சேதம் ஏற்படுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஏறாவூர்பற்று – செங்கலடி பிரதேச சபையின் கூட்டத் தீர்மானத்திற்கு அமைய குறித்த பிரதேச சபைக்கு உட்பட்ட பல பகுதிகளில் வீதிகளில் சுற்றித் திரியும் கட்டாக்காலி மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கை நேற்று (20) முன்னெடுக்கப்பட்டது.

செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் தலைமையில் குறித்த நடவடிக்கை நேற்று மாலை நடைபெற்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதன்போது 10 மாடுகள் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து ஒரு மாட்டிற்கு 5000 ரூபாய் அடிப்படையில் தண்ட பணம் பெறப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.



இதன்போது தண்ட பணம் செலுத்திய உரிமையாளர்களிடம் மாடுகள் வழங்கப்பட்டன.