BREAKING NEWS

தொழில்முறை ஒழுக்கத்தை மீறிய பெண் சட்டத்தரணி நீக்கம்!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
தொழில்முறை ஒழுக்கத்தை மீறிய பெண் சட்டத்தரணி நீக்கம்!

சட்டத் தொழிலுக்குரிய கண்ணியத்தை மீறி, நீதிமன்ற ஆவணங்களைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கெக்கிராவ (Kekirawa) பகுதியைச் சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவரை தொழிலிலிருந்து நிரந்தரமாக நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு கெக்கிராவ நீதிவான் நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, குறித்த சட்டத்தரணி அங்கிருந்த வழக்குக் கோப்பிலிருந்து இரண்டு முக்கிய பக்கங்களை அகற்றிச் சேதப்படுத்தியுள்ளார். இது தொடர்பான முறைப்பாடை அடுத்து , அவர் சட்டத் தொழில் செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

நீதிமன்றத் தடையையும் மீறி அவர் தொடர்ந்து சட்டத் தொழிலில் ஈடுபட்டதால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் பாய்ந்தது. இதனைத் தொடர்ந்து நீதியரசர் யசந்த கோதாகொட தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் பின்வரும் தீர்ப்பை வழங்கியது:

சட்டத்தரணிகள் பதிவேட்டில் இருந்து பெயர் நீக்கம் (தொழில் செய்ய நிரந்தரத் தடை).

ஓராண்டு சிறைத் தண்டனை (இது 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது).

25,000 ரூபா அபராதம்.

“சட்டத்தரணிகளிடம் எதிர்பார்க்கப்படும் உயரிய ஒழுக்கத்தை இவர் மீறியுள்ளார்” எனத் தெரிவித்த நீதியரசர்கள், இத்தீர்ப்பை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டனர். மேலும், குற்றப் பதிவுகளுக்காக அவரது கைரேகைகளைப் பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.