யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று பொன் விழா கொண்டாட்டங்கள் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
ஈழத் தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் இந்த பல்கலைக்கழகம், 1974 ஆம் ஆண்டு ஐப்பசி 6 ஆம் தேதி இலங்கை பல்கலைக்கழகத்தின் ஒரு வளாகமாக ஆரம்பிக்கப்பட்டு இன்று தனித்துவமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக வியாபித்து வளர்ந்துள்ளது.
ஐம்பதாவது ஆண்டைக் கடந்திருக்கும் இப் பல்கலைக்கழகத்தின் பன்னிரண்டு பீடங்களும் இணைந்து, 2024 ஆம் ஆண்டு 6 ஆம் திகதி நடைபெற்ற பொன்விழா நிகழ்வை சிறப்பாக கொண்டாடி வரலாற்றுப் பொக்கிஷமான “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொன் அகவை வரலாறு” என்ற நூலும், நினைவு முத்திரை வெளியீடும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன பிரதம விருந்தினராகவும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கே. எல். வசந்தகுமார சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர். இவ்வாறு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தனது ஐம்பதாவது ஆண்டு விழாவை பெருமிதத்துடன் மற்றும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது.
06 Oct 2025 | 10:43 AM
10 views
கோலாகலமாக பொன் விழா கொண்டாடும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்!
MI
mithuna mithuna
in Latest Updates
தொடர்புடைய செய்திகள்
Latest Updates
யாலா பருவத்திற்கு நீர் போதுமானது; விநியோகத்தில் சிக்கல் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவிப்பு
03 Apr 2026 · 10:44 AM