BREAKING NEWS

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு தொடர்பில் யாழில் 3 சந்தேக நபர் கைது!

MI
mithu mithu in உள்ளூர் செய்திகள்
Report
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு தொடர்பில் யாழில் 3 சந்தேக நபர் கைது!
கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பில் 3 சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண்னொருவரும் இரண்டு ஆண்களும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள் 3 பேரும் மானிப்பாய் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை கொழும்புக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், குற்றக் குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தார்.

சம்பவத்தின் போது சந்தேகநபர்கள் பயணித்ததாக கூறப்படும் சிற்றுந்து ஒன்று கொழும்பு – ஆமர் வீதி பகுதியில் காவல்துறையினரால் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த சிற்றுந்தில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்றும் காணப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.