குவைத்தின் அல்-அஹ்மதி (Al Ahmadi) பகுதியில் இயங்கி வரும் குவைத் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில், இன்று அதிகாலை ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை நடத்தப்பட்ட இந்த ஆளில்லா விமானத் தாக்குதல்களால் சுத்திகரிப்பு நிலையத்தின் பல்வேறு செயல்பாட்டு அலகுகளில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் எந்தவொரு பணியாளரும் காயமடையவில்லை என குவைத் அரசு செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், குவைத் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதாக முன்னரே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், இவ்வாறான பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியான முக்கிய மையங்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.