BREAKING NEWS

அஹங்கமவில் மண் மேடு சரிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

PR
priya priya punidha in Latest Updates
Report
அஹங்கமவில் மண் மேடு சரிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

அஹங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலஸ்ஸ பகுதியில் கட்டுமானத் துறையில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் இன்று மண் மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.

கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மண் மேடு சரிந்து விழுந்தது. இதன்போதே பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த தொழிலாளர்களை மீட்க உடனடியாக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. எனினும் குறித்த தொழிலாளர்கள் மூவரினதும் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன