BREAKING NEWS

தேசபந்து வழக்கு முடிவுக்கு வந்தது

PR
priya priya punidha in Latest Updates
Report
தேசபந்து வழக்கு முடிவுக்கு வந்தது

முன்னாள் பொலிஸ் மாதிபர் தேசபந்து தென்னகோன் அவர்களின் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்வதற்கு உயர்நீதிமன்றம் இன்று (12) தீர்மானித்துள்ளது. 

இந்த வழக்குகளுடன் தொடர்புடையதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த சத்தியக்கடதாசியில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டும், மனுதாரர் தரப்பின் இணக்கத்துடனும் மனு மீதான விசாரணையை முடிவுக்குக் கொண்டுவர நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நீதியரசர்களான பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.