BREAKING NEWS

லெஜெண்ட் சரவணின் இரண்டாவது படம் “லீடர்” திரையரங்கில்

PR
priya priya punidha in சினிமா
Report
லெஜெண்ட் சரவணின் இரண்டாவது படம் “லீடர்” திரையரங்கில்

லெஜெண்ட் படத்தின் மூலமாக நடிகனாக அறிமுகம் ஆன லெஜெண்ட் சரவணின் இரண்டாவது படமான லீடர் படத்தில் நடித்து வருகிறார். 

துரை செந்தில்குமார் இயக்கத்தில் அந்த படம் உருவாகி இருக்கிறது. தற்போது சென்சாரில் U/A சான்றிதழ் கிடைத்து இருக்கும் நிலையில் வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி படம் வௌியாகிறது. 

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கும் லெஜெண்ட் சரவணன் தனக்கு பிடித்த இயக்குனர் நெல்சன் தான் என்றும், அவரை இன்னும் 5 வருடங்களுக்கு பிடிக்க முடியாது எனவும் கூறி இருக்கிறார். 

”அதனால் ஒரு கெஸ்ட் ரோல் ஆவது கொடுங்க நெல்சன், இரண்டு மூன்று நாள் ஷூட்டிங் இருந்தாலும் சரி, பண்ணிடலாம்” என லெஜெண்ட் சரவணன் கேட்டு இருக்கிறார். 

மேலும் தனது மூன்றாவது படத்தில் மூன்று வேடத்தில் நடிக்க போவதாகவும், அந்த படத்தின் பணிகள் தொடங்கிவிட்டது எனவும் கூறியுள்ளார் லெஜெண்ட்.