BREAKING NEWS

மின்னல் அபாயம்: 4 மாவட்டங்களுக்கு ‘அம்பர்’ எச்சரிக்கை!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
மின்னல் அபாயம்: 4 மாவட்டங்களுக்கு ‘அம்பர்’ எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் இருக்கவும்.

வயல்வெளிகள், மைதானங்கள் மற்றும் நீர்நிலைகளில் தங்குவதைத் தவிர்க்கவும்.

மின் சாதனங்கள் மற்றும் தொலைபேசி பயன்பாட்டைத் தவிர்க்கவும்.

திறந்த வாகனங்களில் (துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள்) பயணிப்பதைத் தவிர்க்கவும்.