நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று (5) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:
அமெரிக்க டொலர்: கொள்முதல் பெறுமதி 306 ரூபாய் 80 சதம்; விற்பனை பெறுமதி 314 ரூபாய் 23 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட்ஸ்: கொள்முதல் பெறுமதி 408 ரூபாய் 62 சதம்; விற்பனை பெறுமதி 421 ரூபாய் 33 சதம்.
யூரோ: கொள்முதல் பெறுமதி 355 ரூபாய் 34 சதம்; விற்பனை பெறுமதி 366 ரூபாய் 92 சதம்.