BREAKING NEWS

ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத்தின் மறைவு: மஹிந்த ராஜபக்ஸ ஆழ்ந்த இரங்கல்!

DH
dhusanthi dhusi in அரசியல்
Report
ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத்தின் மறைவு: மஹிந்த ராஜபக்ஸ ஆழ்ந்த இரங்கல்!

ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெளியான செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தின் ஊடாக அவர் இந்த இரங்கல் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் இலங்கையின் மிக நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தவர் என்று மஹிந்த ராஜபக்ஸ நினைவு கூர்ந்துள்ளார்.

இலங்கையின் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் உமா ஓயா பல்நோக்கு திட்டம் ஆகியவற்றை ஆரம்பித்து முன்னெடுப்பதில் அவர் வழங்கிய பங்களிப்பு அளப்பரியது.

வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்படும் மஹ்மூத் அஹ்மதிநெஜாத்தின் குடும்பத்தினருக்கு மஹிந்த ராஜபக்ஸ தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பதற்றமான சூழலில், போர் நடவடிக்கைகளைத் தொடர்வதை விட, அனைத்து தரப்பினரும் நிதானத்துடனும் பேச்சுவார்த்தைகள் ஊடாகவும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.