BREAKING NEWS

மாவனல்லை City College மாணவர்களின் அபார சாதனை!

DH
dhusanthi dhusi in Latest Updates
Report
மாவனல்லை City College மாணவர்களின் அபார சாதனை!

அண்மையில் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளில், கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவனல்லை City College மாணவர்கள் உயிரியல் மற்றும் கணிதப் பிரிவுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர்.

தமிழ் மொழி மூல உயிரியல் பிரிவில் தோற்றிய நஸ்லின் அமதுல்லாஹ் (Nazlin Amathullah), 3A சித்திகளைப் பெற்று கேகாலை மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கணிதப் பிரிவில் ஆதிப் அலி (9-ஆம் இடம்), உயிரியல் பிரிவில் பாத்திமா றிதா (10-ஆம் இடம்), மொஹமட் முபீஸ் (16-ஆம் இடம்) மற்றும் மொஹமட் ஆமிர் (23-ஆம் இடம்) எனப் பல மாணவர்கள் மாவட்ட ரீதியில் முன்னிலை பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றியீட்டிய மாணவர்களைப் பாராட்டும் விசேட நிகழ்வு, இம்மாதம் முதலாம் திகதி மாவனல்லை City College வளாகத்தில் இடம்பெற்றது. இதில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

தமது வெற்றிக்குக் காரணமான பெற்றோர் மற்றும் வழிகாட்டிய ஆசிரியர்களான டாக்டர். ஹிஃப்ராஸ், ஃபாசில், சஜீன், டாக்டர். ஷாகீர், நஃப்ராஸ் மற்றும் பாஸ்மின் ஆகியோருக்கு மாணவர்கள் இதன்போது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.

கடந்த 2023-ஆம் ஆண்டும் உயிரியல் பிரிவில் முதல் மூன்று இடங்களையும் இக்கல்லூரி மாணவர்கள் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த 15 ஆண்டுகளாகக் கல்வித்துறையில் பாரிய பங்களிப்பை வழங்கி வரும் City College, இம்முறையும் தனது தரத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.